மணல் விபூதியாக மாறும் அதிசயக் கோவிலான சுருளிமலை வேலப்பர் கோவில் | Surulimalai Velapar Temple, a miraculous temple where the sand turns into Vibhuti
மணல் விபூதியாக மாறும் அதிசயக் கோவிலான சுருளிமலை வேலப்பர் கோவில் :
அன்றைய காலத்தில் கோவில் கட்டும் போது, ஒவ்வொரு கோவிலுக்கும் ஏதோ ஒரு தனித்துவம் இருந்தது. ஆனால் இந்த முருகன் கோவிலுக்கு ஒரு சிறப்பு உண்டு!
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். இக்கோயிலின் மூலவர் வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். சிவன் திருமணத்தின் போது இமயமலைக்கு அனைவரும் சென்றதால் வடதிசை உயர்ந்து தெற்கு வீழ்ந்து காணப்பட்டது. இதனால், உலகம் சமநிலையை இழக்க, சிவபெருமான் அகத்தியரை தென்பொதிகை என்ற இந்த மலைக்கு அனுப்பி உலகை சமநிலைப்படுத்தினார். அப்போது இங்குள்ள குகையில் சிவன் மணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தார்.
சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் இக்கோயிலுக்கு அருகிலுள்ள மூன்று குகைகள் மிகவும் பிரபலமானவை. அவைகள்
1.விபூதிக்குகை
2.கன்னிமார்க்குகை
3.கைலாய குகை
இங்குள்ள விபூதிக்குகையில் தான் மணல் காய்ந்து விபூதியாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்திற்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ந்து, அது காய்ந்து பாறையாக மாறிகிறது. மேலும் இங்குள்ள இலைகள் தொடர்ந்து 40 நாட்கள் தண்ணீரில் ஊறிய பின் பாறையாக மாறுகிறது. இங்குள்ள பாறைகளில் எத்தனை நாட்கள் தண்ணீர் விழுந்தாலும் பாசம் பிடிக்காமல், வழுக்காமல் இருப்பது அதிசயம்.இங்குள்ள நீர்வீழ்ச்சி இசையுடன் சுருதியைக் கொடுத்ததால், ஸ்ருதி தீர்த்தம் என்றும் பின்னர் மருவி என்றும் சுருளி தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது. இங்குள்ள முருகப்பெருமான் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி தருவதால் இக்கோயில் இறைவன் சுருளியாண்டி என அழைக்கப்படுகிறார்.
நாக கன்னிமார்கள் கன்னிமார்க்குகையில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இங்குள்ள நாககன்னிகள் அனுமதி அளித்தால் மட்டுமே பக்தர்கள் கைலாய குகைக்கு செல்ல முடியும்.சிவன் கைலாய குகையில் தவம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருளிமலை வேலப்பர் கோவில் மற்றொரு சிறப்பு:
இத்தலத்தின் மூலவரான சுருளிவேலப்பர், குழந்தை இல்லாதவர்களுக்குக் இறுதிக் கடைமைகளைச் செய்தார். எனவே இறுதிக்காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் மூலவர் சுருளிவேலப்பரைத் தங்கள் குழந்தையாகக் கருதுகின்றனர்.
நாமும் சுருளிமலை சென்று வேலப்பரைத் தரிசனம் செய்து வளம் பெறுவோம்.
சுருளிமலை சுருளிவேலப்பர் திருக்கோயில் அமைவிடம் :
தேனி மாவட்டம்
